பூர்வ காவேரி

Sunday, 5 June 2016

சரவணகுமார் - திருமண வரவேற்பு - தாவளம் - பயணம் - 2

கோவை - தடாகம் - ஆனைகட்டி என கேரளா எல்லையை தாண்டி, அங்கிருந்து அகலி வழியாக அட்டபட்டி செல்லும் சாலை இது. கேரள வனத்துறையினரால் பாதுகாக்கப் படும் Reserved Forest -ல் மலை பாதையில் பயணமானோம். Gods Own Country என சும்மாவா அழைக்கின்றார்கள்!! வழியெங்கும் மரங்கள் பசுமை மட்டுமே. மலைப்பாதை அத்தனை சுலபமாக இல்லை குறுகிய திருப்பங்கள், கொண்டை ஊசி வளைவுகள் என கடினம் தான்.  தாவளம் வந்தாயிற்று. Resort - க்கு செல்ல வழி சொல்ல பணியாளர் வந்திருந்தார். அவரின் வழிகாட்டுதலின்படி மேலும் கரடு முரடான மலை சரிவான சாலையில் பயணித்து...
Read More

Saturday, 28 May 2016

சரவணகுமார் - திருமண வரவேற்பு - தாவளம் - பயணம் - 1

நண்பர் சரவணகுமாரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு மாதத்துக்கும் மேலாக பயணம் திட்டமிடப்பட்டது. வரவேற்பு ஞாயிற்றுக் கிழமையாக இருக்கவே, இன்னும் ஒரு நாள் சேர்த்து ஊர் சுற்றலாம் என முடிவு செய்து ஊட்டி, கேரளா என ஏகப்பட்ட இடங்களை தெரிவு செய்து கடைசியாக கேரளா - தாவளம் - அட்டபட்டி - ல் இருக்கும் ஒரு Eco - Organic - River View Resort என்று முடிவெடுக்கப் பட்டது. சரவணகுமாரின் திருமண வரவேற்பு என்பதால் (!!!) தற்போதைய மற்றும் முன்னாள் அலுவலக நண்பர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைத்து திங்கட்கிழமை விடுப்பு எடுப்பதாக...
Read More

Sunday, 2 August 2015

குற்றாலம் - கன்னியாகுமரி - II

குற்றாலம் - கன்னியாகுமரி - நாள் 2: குற்றாலம் - கன்னியாகுமரி - நாள் 1 முதல் நாள் குற்றாலம் பயணத்தை முடித்துக்கொண்டு, முன் அதிகாலை 01:30 மணியளவில் கன்னியாகுமரி வந்தடைந்தோம். இருவர் ஓர் அறையில் தங்குமாறு அறைகள் ஒதுக்கியிருந்தனர். பயணக் களைப்பில் உடனே உறக்கம். கன்னியாகுமரியில் விவேகானந்தபுரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி விவேகானந்தா கேந்திரா சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தனித் தனி கட்டிடங்களில் பல  வகையான அறைகள் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைத்துள்ளனர். மேலும் அறைகள் 2 தனித் தனிக் கட்டில்கள்,...
Read More

குற்றாலம் - கன்னியாகுமரி - I

இரண்டு நாட்கள் அலுவலகத்தில் இருந்து குற்றாலம் - கன்னியாகுமரி சுற்றுலா. Official (அ) Un-Official என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். என்னுடைய பணிக் காலத்தில். கடந்த 8 ஆண்டுகளாக நடக்காத ஒன்று.  கிட்டத்தட்ட 30-40 நாட்களுக்கு முன்னதாகவே சென்னையில் இருந்து போக வர டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டு, பயண திட்டமும்  தயார் நிலையில் இருந்தது. அனைவரும் அந்த நாளுக்காக வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது.   நாள் 1: 7 மணி ரயிலுக்கு 5 மணிக்கே அலுவலகத்திலிருந்து கிளம்பியாகிவிட்டது....
Read More

Thursday, 30 July 2015

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் - அஞ்சலி

ஏழ்மையில் பிறந்து, எழுச்சி அடைந்து, எளிமையை விரும்பி, எண்ணியவையை சாதித்த, எதார்த்த உள்ளமே!! எத்தனை எழுச்சி உரைகள், அத்தனையும் புதிய முயற்சிக்கான வரைமுறைகள்!! எத்தனை அறிவியல் ஆராய்ச்சிகள், அத்தனையும் நாட்டின் வளர்ச்சிக்கான படிகள்!! எத்தனை விருதுகள் கையில், அத்தனையும் தலையில் ஏற்றாத உழைப்பின் உருவ வடிவங்கள்!! ஓய்வுகாலத்திலும் ஓயாமல் ஒருமனதாய் மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக, மக்களுக்காக பணியாற்றிய பெருமைக்குரிய பேராசிரியரே!!! உங்கள்...
Read More

Friday, 2 January 2015

2014 ஆண்டு அனுபவங்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் - 2015

01-Jan-2014 முதல் 30-Dec-2014 வரை Diary, Flashback, ஆண்டறிக்கை, Annual Report எழுதுகின்ற அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லை (தன்னடக்கமே :-) ). இருந்தாலும் சென்ற 2014 ஆம் ஆண்டு இனிதே பல நல்ல விதைகளை தூவிச் சென்றுள்ளது.  2014 தொடக்கம் முதலே வெகு நேர்த்தியாக அமைந்தது. வேலை நிமித்தமாக பெங்களூர், மும்பை என பயணம் அதிகம் செய்த ஆண்டாகவும், பதவி உயர்வு கொடுத்து மேலும் பணிச்சுமை (சுகமான) அதிகரித்த ஆண்டாகவும், வாழ்வின் மிகப் பெரிய நிகழ்வான திருமணம் நடந்தேறிய ஆண்டாகவும் அமைந்தது. இந்த விதைகள் அனைத்தும்...
Read More

Thursday, 1 January 2015

Happy New Year and Book Fair 2015

Wish you all a very Happy and Prosperous New Year 2015.. As usual, January brings us with loads of festivals like New Year, Pongal, Sangeetha Season, Republic Day, Mylapore Festival and none other than Chennai Book Fair. And here comes the details of 38th Chennai Book Fair @ Chennai. ...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena