Thursday, 31 January 2013

ஆதார் அடையாள அட்டை

அகரம் சிவகுமார் திருமண வரவேற்பை முடித்துக் கொண்டு, அய்யம்பேட்டை வந்த மறுநாள், ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் எடுப்பதாய் சொல்லவே குடியரசு தினமான அன்று வெகு நாட்களுக்குப் பிறகு பள்ளி சென்று பார்த்தேன். தேசியக் கொடியேற்றி முடித்து மேடையில் பேசிக் கொண்டிருந்தனர் ஆன்றோர் பெருமக்கள். வெளியே காத்திருந்து சில நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பசுமையான நினைவுகள் குடியரசு மற்றும் பள்ளிக்கு சுதந்திர தின நிகழ்சிகளுக்கு செல்வது. 8 ஆம் வகுப்பு வரை நான் தான் கொடிக்கு முன் நின்று உறுதி...
Read More

Monday, 28 January 2013

சிவகுமார் திருமண வரவேற்பு பயணம் - 1

அகரம் நண்பர் சிவகுமார் அவர்களின் திருமண வரவேற்ப்பில் கலந்து கொள்வதற்காக வழக்கம் போல நீண்ட யோசனைக்குப் பிறகு வெள்ளிக் கிழமை (25-ஜன-2013) அரை நாள் விடுப்பெடுத்துக் கொண்டு சீர்காழி நோக்கிப் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணமானேன். மதிய நேர பயணம் செய்து நீண்ட நாட்கள் ஆகின்றது, எப்படி நேரத்தை பயனுள்ளதாக செலவழிப்பது என எண்ணி ஆனந்த விகடனும், புத்தக காட்சியில் வாங்கிய "தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் - எ. கே. செட்டியார்" புத்தகமும் எடுத்துச் சென்றேன். மத்திய கைலாசத்தில் பாண்டிச்சேரி பேருந்து கிடைக்கவே அங்கிருந்து...
Read More

Tuesday, 22 January 2013

புத்தகக் காட்சி - 2013 ல் நான் வாங்கிய புக் லிஸ்ட்

புத்தகக் காட்சி - 2013 ல் நான் வாங்கிய புக் லிஸ்ட் கீழே, பெயர் - நூல் ஆசிரியர் - பதிப்பகம்; என்ற வரிசையில் படிக்கவும். 1. மூன்று விரல் - இரா. முருகன் - கிழக்கு 2. தமிழ் நாடு பயணக் கட்டுரைகள் - AK செட்டியார் - சந்தியா  3. ஊர் சுற்றி புராணம் - ராகுல் - நியூ செஞ்சுரி 4. சென்னைக்கு வந்தேன் - அதியமான் - காலச்சுவடு 5. எப்படி ஜெயித்தார்கள் - ரமணன் - புதிய தலைமுறை 6. 18 வது அட்சக் கொடு - அசோகமித்திரன் - காலச்சுவடு 7. பாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்க் - கிழக்கு 8. நாளைய இந்தியா - அதனு தே - கிழக்கு 9. நடந்தாய் வாழி காவேரி...
Read More

புத்தக காட்சி - 2013

ஜனவரி மாதம், பொங்கலுக்குப் பிறகு எதிர்பார்க்கும் மற்றொரு நிகழ்வு புத்தகக் காட்சி. வலைப் பூ எழுத ஆரம்பித்து பல வருடங்கள் :-) ஆனாலும் புத்தகக் காட்சி பற்றி எழுதும் முதல் பதிவு. இம்முறை எ. ஆர். ரஹ்மானுக்கு தான் நன்றி சொல்லியாக வேண்டும். 29-Dec-2012  நிகழ்ச்சி என்பதாலேயே புத்தகக் காட்சி சுமார் ஒரு வாரம் தள்ளிப் போனதாகவும், செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் சென்னை மெட்ரோ ரயில் வேலைகளாலும் YMCA மைதானத்துக்கு இடம் மாறியதாகவும் பரவலாக தகவல். எது எப்படியோ, இந்த முறை புத்தகக் காட்சி மைதானம் பிரம்மாண்டமான இடத்தில் நடந்தது. சென்னையின்...
Read More

Sunday, 20 January 2013

படித்ததில் பிடித்தது ...

மன அழுத்தத்தை குறைக்க, கீழ் காணும் 10 வழி முறைகளை பின்பற்றலாமே . 1. கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள். எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 2. ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள். எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும்...
Read More

Saturday, 5 January 2013

பிச்சைப் பாத்திரம்.... - நான் கடவுள் (பிடித்த பாடல்)

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே - என் ஐயனே - யாமொரு பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே - என் ஐயனே பிண்டம் எனும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் - பிச்சைப் பாத்திரம்.. அம்மையும் அப்பனும் தந்ததால் - இல்லை ஆதியின் ஊழ்வினை வந்ததால் இம்மையை நானறியாததால் - இந்த பொம்மையின் நிலையெனில் உண்மையை உணர்ந்திட - பிச்சைப் பாத்திரம்.. அத்தனை செல்வமும் உன்னிடத்தில் - நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் - அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில் ஒருமுறையா இல்லை இருமுறையா பல...
Read More

நலம் வாழ.... - மறுபடியும் (பிடித்த பாடல்)

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்! தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன்வாசல் வந்தாடும்! இளந் தென்றல் உன்மீது பண்பாடும்! மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்! மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்! இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்! எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்! விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு! இதிலென்ன பாவம்.....! எதற்கிந்த சோகம்? கிளியே..! (நலம் வாழ...) கிழக்கினில் தினம்தோறும் கதிரானது! மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது! கடல்களில் உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும்...
Read More

Thursday, 3 January 2013

2013 - புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் - 2

01-Jan-2013 காலை: புது வருட பிறப்பென்றால் மாம்பலம் பகுதியிலுள்ள விநாயகர் மற்றும் கருமாரி அம்மனை தரிசித்து விட்டு, தி.நகர் சிவா-விஷ்ணு ஆலயம் சென்று வழிபட்டபிறகு, எப்போதும் திருமலை - திருப்பதி தேவஸ்தானக் கோவிலுக்கும் செல்வது வழக்கம். இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல. திருமலை - திருப்பதி தேவஸ்தானக் கோவிலில் தான் மிக நீண்ட வரிசை பொது தரிசனம் செய்வதற்காக. இம்முறை, Pass Entry என்று புதிய வரிசை வேறு.  இந்த Pass யாருக்கெல்லாம், எப்போது கொடுத்தார்கள் என்பதெல்லாம் திருமால் மட்டுமே அறிந்த உண்மை. போலீசாரின் கெடுபிடிகளுடன்...
Read More

Wednesday, 2 January 2013

2013 - புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் - 1

இம்முறையும் வழக்கம்  போலவே, Shalom Mansion ல் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டின. நள்ளிரவு 12 மணி அடிக்கும் போது பக்கத்து அறை நண்பர்களின் வாழ்த்துக்களுடன், வாண வேடிக்கைகளுடன் இனிதே பிறந்தது இந்த நல்ல ஆண்டு. Mansion மாடியில் இருந்து பார்த்தால் 360 டிகிரியிலும் சென்னை மாநகரம் வாண வேடிக்கைகளால் இரவை பகலாக்குவதைப் போல மின்னிய காட்சி காணக் கிடைக்காதது. Mansion வாசலில் நண்பர்களின் நடனங்கள், ஒரு அறை நண்பரின் பிறந்த நாள் கேக் ரோட்டில் வைத்து வெட்டியது, போகிற வருகிற கார் பைக்குகளை நிறுத்தி...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena