Thursday, 26 September 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும். இடம்: டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம். வழி: மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும். பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில்...
Read More

Friday, 20 September 2013

நாய் பாசம்

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். இரவு மணி சுமார் 11 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும். ஆள் அரவமில்லாத அந்த தெருவில் இரவு நேரத்து வாசிகளான நாய்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. 4 முதல் 5 தெரு நாய்கள் ஒன்றாக நின்றுகொண்டிருந்தன ஒரு வீட்டின் முன்னால். அதே வீட்டினுள்ளிருந்து எஜமானருடன் மேல் ஜாதி வகை நாய் நடை பயிற்சிக்காக (வாக்கிங்) வந்து கொண்டிருந்தது. எஜமானர் மற்ற தெரு நாய்களின் அட்டகாசத்தை பார்த்துவிட்டு தனது மேல் ஜாதி நாயிடம், "ஜிம்மி போகாதே, அங்கே நாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. பார்த்தால் உன்னை...
Read More

Friday, 13 September 2013

தலை காவிரி முதல் கடை காவிரி வரை

குடகு மலையில் உருவாகும் காவிரி பிரம்மாண்டமாக பல மைல் கடந்து, பல நிலங்கள் கடந்து, சில அணைகளுள் அகப்பட்டு, பல ஆற்றோரங்களை கடந்து, பல மனிதர்களை கடந்து, கடை மடைப் பகுதிகளை செம்மையாக்கி கடைசியில் ஆடு தாண்டும் காவிரியாக மாறி கடலில் இணைகிறது. இந்த காவிரியின் பயணத்தை, 'நடந்தாய் வாழி காவேரி' எனும் நூலில் தி. ஜானகிராமன் மிகவும் அருமையாக, அனுபவப் பூர்வமாக பயணித்து எழுதியிருப்பார். பயணித்த காலம் சுமார் 40 வருடங்களுக்கு முன்னதாக இருக்கும்.  சமீபத்தில், அதீதம் தளத்தில் 'விண்ணோடு விரியும் விழிகள் - காவிரியின் கதை' என்ற பெயரில்...
Read More

Thursday, 5 September 2013

மேன்ஷன் வாழ்க்கை கவிதைகள்

மேன்ஷன் வாழ்க்கையைப் பற்றி வந்த தமிழின் முதல் கவிதைத் தொகுப்பு என அறியப்படுகிறது, பவுத்த அய்யனாரின் "மேன்ஷன் கவிதைகள்" 1. இந்த அறையை நோக்கி பூமியின் எப்பகுதியிலிருந்தும் ஒரு கடிதம்கூட எட்டிப்பார்த்ததில்லை இந்த அறைக்கு நண்பர் என்றுசொன்ன எந்த மனிதரின் காலடியும் பட்டதில்லை பறவையின் குரல் நாயின் குரல் வானின் குரல் எதுவும் தொட்டதில்லை சூரியனின் கதிருக்குக் காத்திருந்து காத்திருந்து மனமொடிந்ததுதான் மிச்சம் காற்று மட்டும் அறீயாமல் வந்து உயிரைக் காப்பாற்றுகிறது அறையும் நானும் காத்திருக்கிறோம் அறிமுகமான மனித முகம் வேண்டி 2....
Read More

Wednesday, 4 September 2013

விளம்பர உலகம்

ஒரு பொருள், சேவை, தகவல் மக்களை சென்றடைய விளம்பரங்கள் இன்றியமையாத வழி. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தகவல்கள் பரிமாற்றம் சுவர் ஓவியங்களினாலும், போஸ்டர் பிறகு பத்திரிக்கை, செய்தித் தாள், வானொலி, தொலைக் காட்சி வாயிலாகவும் அதன் பிறகு மின் அஞ்சல் மற்றும் இன்டர்நெட் வாயிலாகவும் தெரிவிக்கப்படுகின்றன. கீழ்காணும் படத்தில் ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பு விளம்பரம்.  இந்த விளம்பரம் சென்னை, கன்னிமாரா...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena