நண்பர் சரவணகுமாரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு மாதத்துக்கும் மேலாக பயணம் திட்டமிடப்பட்டது. வரவேற்பு ஞாயிற்றுக் கிழமையாக இருக்கவே, இன்னும் ஒரு நாள் சேர்த்து ஊர் சுற்றலாம் என முடிவு செய்து ஊட்டி, கேரளா என ஏகப்பட்ட இடங்களை தெரிவு செய்து கடைசியாக கேரளா - தாவளம் - அட்டபட்டி - ல் இருக்கும் ஒரு Eco - Organic - River View Resort என்று முடிவெடுக்கப் பட்டது.
சரவணகுமாரின் திருமண வரவேற்பு என்பதால் (!!!) தற்போதைய மற்றும் முன்னாள் அலுவலக நண்பர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைத்து திங்கட்கிழமை விடுப்பு எடுப்பதாக முடிவு செய்யப்பட்டு பயண திட்டம் வகுக்கப்பட்டது.
நாள் 0 (மாலை): சென்னை - கோவை பயணம்
நாள் 1: சரவணகுமார் வரவேற்பு - தாவளம் பயணம் - தங்கல்
நாள் 2: தாவளம் ஊர் சுற்றல் - சென்னை பயணம்
பயணத்திற்கான பேருந்து பர்வீன் நிறுவத்திலும், தங்குமிடத்திற்கான முன்னேற்பாடுகளையும், பயண நாளுக்கான இரவு உணவும் ஏற்பாடு செய்தாகிவிட்டது.
நாள் 0 மாலை 6 மணிக்கெல்லாம், அலுவலகம் முன்னாள் நண்பர்களின் வருகை களை கட்டியது. இரவு சுமார் 7:45 மணிக்கு பயணத்தை தொடங்கினோம். வழியில் Chromepet, Guduvancherry என நண்பர்களை பேருந்தில் ஏற்றியாயிற்று. இரவு உணவை நெடுஞ்சாலை மொடேல் அருகில் நிறுத்தி முடித்தாயிற்று. இடையில் சேலம் புறவழி சாலையில் தேநீர் மற்றும் இயற்கை கடன்கள் நிறைவேற்றம்.
காலை மணி 7 க்கு கோவை - சூலூர் வந்தடைந்தோம். சூலூரில் நண்பர் ஹோட்டல் அறைகளை எங்களுக்காக ஒதுக்கியிருந்தார். சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பிறகு நாங்கள் எங்களை தயார் செய்து கொண்டு காலை உணவுக்கு தயாரானோம். திருமண வரவேற்புக்கு செல்கிறோம் என்பதால் அனைவரும் வேஷ்டி - சட்டை அணிந்திருந்தோம்.
திருமண வரவேற்பு கோவை - ஈச்சனாரி ஹேமாம்பிகை மண்டபத்தில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் முதலில் ஒரு குழுவாக மண மக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலும் ஒரு கேக் ஆர்டர் செய்து அதை மேடையிலேயே மணமக்களை வெட்ட வைத்தோம்.
மதிய உணவை முடித்துக் கொண்டு சுமார் 2 மணிக்கெல்லாம் அடுத்த இலக்கான தாவளம் நோக்கி புறப்பட தயாரானோம். பேருந்தில் ஏறும் போதே பின் டயர் பஞ்சர் என்றும் அதனை சரி செய்த பிறகே தாவளம் நோக்கி பயணப் படலாம் என்றனர், கோவை வடவள்ளி அருகே பேருந்து பின் (பின்) சக்கரத்தை கழற்றி, மாட்டி சரி செய்தாயிற்று. நண்பர்கள் அனைவரும் இந்த டயர் கழற்றி-மாட்டும் வேலைகளில் பேருந்து ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு உதவி செய்தனர். 4 மணியளவில் தாவளம் நோக்கி பயணமானோம்.