எனது செல்பேசியினுடைய மின் கலன் புதுப்பிக்கும் கருவி (Cell Phone - Charger) பழுதடைந்ததால் புதிய கருவி வாங்க பூர்விகா மொபைல் வேர்ல்ட் (ரங்கநாதன் தெரு) ல் விசாரித்த பொது ரூ. 350 மற்றும் வாரண்டி 6 மாதங்கள் என்றார்கள் முதல் நாளில். இதே பூர்விகா மொபைல் வேர்ல்ட் (புரசை) ல் ரூ. 350 மற்றும் 3 மாதங்கள் மட்டுமே வாரண்டி என்றார்கள்-இது மறு நாள். அன்றே மறுபடியும் ரங்கநாதன் தெரு பூர்விகாவில் ரூ. 300 மற்றும் 6 மாத வாரன்ட்டியில் அந்த கருவியை வாங்கியிருக்கிறேன். ஏன் ஒரே கடையின் பெயரில் வாடிக்கையாளர்களை இப்படி ஏமாற்றுகிறார்கள் என்று புரியவில்லை. ஒரே நாளில் 50 ரூபாய் குறைந்து விட்டதா என்ன? வாடிக்கையாளரே தெய்வம் என்ற மகாத்மாவின் கருத்தெல்லாம் மலையேறிவிட்டது. (பணம் படும் பாடு....)
தி. நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டே ஸ்டாப் ல் வந்து விடும் காமராஜர் இல்லம் நிறுத்தம், அதற்கு வெள்ளை நிற போர்டு உள்ள பேருந்தில் கட்டணம் ரூ. 4. இன்று பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை வரை செல்ல நேர்ந்தது. மொத்தம் 6-8 பேருந்து நிறுத்தங்கள். அதற்கும் ரூ. 4 பேருந்துக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. என்ன கணக்கில் கட்டணங்களை நிர்ணயம் செய்கிறார்களோ. அரசுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே தெரியும் உண்மை. (பணம் படும் பாடு....)
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment