இதெல்லாம் முதல் காட்சியையோ அல்லது Preview Show வை பார்த்தவர்கள் எழுதவேண்டியது என்கிறீர்களா.. (சும்மா ஒரு விளம்பரம்... - வரலாற்றில் நாமும் இடம் பிடிக்கணும் இல்லையா....)
நண்பர் வீரமணி (ஜீ தமிழ்) நண்பர்களுக்காக முன் பதிவு செய்திருக்க, ஒரு புண்ணியவான் வழக்கம் போல கடைசி நேரத்தில் வராததனால், இடையில் சேர்ந்து கொண்டேன். சனிக்கிழமை காலை 09:50 க்கு காட்சி புரசைவாக்கம் அபிராமி மெகா மால் - 7 ஸ்டார் ல். 09:00 மணிக்கு மாம்பலத்தில் இருந்து Fast Local Train ல், எழும்பூர் வந்து அங்கிருந்து 20 ஆம் எண் பேருந்தில் அபிராமி மெகா மால் வந்த போது மணி 09:40. (எனக்கே ஆச்சர்யம் அவ்வளவு விரைவாக வந்ததற்கு.)
சரியாக 9:50 க்கு காட்சி ஆரம்பமானது. நம்மூர் டென்ட் கொட்டாய் போல Title, கமல் ஹாசன் பெயர் ஆரம்பித்து அத்தனைக்கும் ஒரே விசில் தான்.
முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார்கள். விமானம் டேக் ஆப் ஆவதைப் போல, மெல்ல வலது, இடது திரும்பி, நேராகி, லேசாய் நகர ஆரம்பித்து பின்பு தடதடவென ஒர் ஓட்டத்துடன், விர்ரென மேலெறும் போது ஒர் பதட்டப் பந்து நமக்குள் உருவாகுமே அந்த அனுபவத்தை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். பயணத்தின் போது இடையிடையே ஏறபடும் சலிப்புகளும், ஃப்ரெஷ்ஷான ஹோஸ்டஸை பார்த்ததும் கிளறி நிற்கும் சுறுசுறுப்புமாய் படம் க்ளைமாக்ஸ் வரை பயணிக்கிறது.
கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் விதம், அவர்களின் பின்னணி, அக்கேரக்டர்களுக்கிடையே இருக்கும் உறவுகளின் நிலை என்ன என்பதை எத்தனை நாசுக்காக, சிறுசிறு வசனங்கள், காட்சிகளின் மூலமாய் வெளிப்படுத்தும் விதம், உலகத்தரம். சமகால தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே பார்த்திருக்க முடியாது. அதன் பின் வரும் தலிபான் தீவிரவாத குழுக்களின் பின்னணிக் கதை, ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்க்கையில் பின்னி பினைந்திருக்கும் தீவிரவாதம் பற்றிய காட்சிகள், இதுவரை இந்திய திரையில் சொல்லப்படாதது.
நாட்டிய கலைஞனாய் வரும் நேரங்களில் கமலின் குரல் மற்றும் உடல் மொழியில் தெரியும் நளினம், ”உனைக் காணாத” பாடலில் அவர் காட்டும் முகபாவங்கள் வாவ்.. க்ளாஸ். முக்கியமாய் நியூயார்க் வீதிகளில் முழுக்க முழுக்க பெண்மைத்தனமில்லாமல் நளினம் கலந்த ஒர் நடை நடந்து போவார்.. வாவ்.. வாவ்.. கலைஞன். அதே போல ஒர் இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்து அல்ல ஒர் முஸ்லிம் என்று பிரகடன்ப்படுத்தி, தன் நிஜ நிலையை உணர்த்தும் காட்சி வாவ்..வாவ்..வாவ்... மக்களே தயவு செய்து அந்தக் காட்சியை உற்று கவனியுங்கள் நடிப்பிலாகட்டும், டெக்னிக்கல் ப்ரில்லியன்சிலாகட்டும் விஷூவல் ட்ரீட். ஒரு காட்சியில் டைமிங்கில் கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வார் எதிரிகளை துவம்சம் செய்து விட்டு, அந்த நேரத்தில் என்னையும் அறியாமல் கை தட்டிக் கொண்டேயிருந்தேன். மொத்த தியேட்டரும் உற்சாக குரலெழுப்பியது.
கடைசியில், விஸ்வரூபம் - II இந்தியா என்று வேறு போட்டு மிரட்டுகிறார்(கள்). பார்ப்போம்.....
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment