சமீபத்தில் யோகா வகுப்புக்காக (ஆம்! மிக தாமதமான முடிவுதான்), சென்னை மாம்பலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று வருகிறேன்.
வகுப்பு காலை 05:30 மணி முதல் 07:00 மணி வரை பள்ளியின் மூன்றாம் மாடியில். பள்ளியில் உள்ள UKG வகுப்பு கரும் பலகை கண்ணில் பட்டது. என்ன தான் பாடம் சொல்லித் தந்திருக்கின்றனர் என்று கவனித்தேன்.
கரும் பலகையின் மேல் புறத்தில் வலது ஓரம் நாள் மற்றும் கிழமை, இடது புறம் பதிவு மற்றும் வருகை. (வழக்கம் போல) நடுவில் வழக்கமாக ஏதாவது பொன்மொழிகள் எழுதுவது உண்டு.
UKG வகுப்பில் இவ்வாறு எழுதியிருந்தது.
"நீ நுழைந்துள்ளது பள்ளிக் கூடத்தின் வகுப்பறைக்குள் மட்டுமல்ல...
உன் வாழ்க்கைக்குள்ளும் தான்..."
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment