குடமுருட்டி - காவேரி நதியின் முக்கிய கிளை நதி, "பூர்வ காவேரி" என்பது இந்நதியின் பழைய பெயர். குடமுருட்டி ஆறு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் இருந்து காவிரியின் கிளை நதியாகிறது.
சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, குடமுருட்டி எனும் நதி இலங்கை, கிளிநொச்சி பகுதியிலும் இருப்பதாகக் கண்டேன். ஒரு நாட்டில் உள்ள நதியின் பெயர், மற்றொரு நாட்டில் அறியப்படுவது சாதாரணம். (உதாரணம்: சிந்து நதி பாகிஸ்தானிலும் உள்ளது). என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை நிலப் பரப்பில் பிரிந்துள்ள நாடுகளில் இவ்வாறு இருப்பது இயற்கை.
ஒரு தீபகற்பத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் பாயும் நதி, அருகிலிருக்கும் ஒரு தீவிலும் பாய்கின்றது என கேள்விப் படும் போதே ஆச்சர்யமாக இருக்கின்றது.
இரண்டு காரணங்கள்.
1. நதியின் பெயர் மட்டும் ஒற்றுமையாக இருக்கலாம்.
2.முன்னொரு காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை இணைந்திருந்த நாட்களில் இந்நதி இலங்கை பிரதேசத்தில் பாய்ந்திருக்கலாம்.
இதன் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்.தற்போது, குடமுருட்டி கிளிநொச்சியின் அருகே உள்ள பூநகரி எனும் ஊரில் ஓடிக் கொண்டிருக்கிறது. கிளிநொச்சியின் பழம்பெறும் கிராமங்களை பூநகரி கொண்டுள்ளது. பூநகரியின் மொட்டைக் கறுப்பன் அரிசி உலகப் பகழ் பெற்றது.
மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment