கோவை - தடாகம் - ஆனைகட்டி என கேரளா எல்லையை தாண்டி, அங்கிருந்து அகலி வழியாக அட்டபட்டி செல்லும் சாலை இது. கேரள வனத்துறையினரால் பாதுகாக்கப் படும் Reserved Forest -ல் மலை பாதையில் பயணமானோம். Gods Own Country என சும்மாவா அழைக்கின்றார்கள்!! வழியெங்கும் மரங்கள் பசுமை மட்டுமே. மலைப்பாதை அத்தனை சுலபமாக இல்லை குறுகிய திருப்பங்கள், கொண்டை ஊசி வளைவுகள் என கடினம் தான்.
தாவளம் வந்தாயிற்று. Resort - க்கு செல்ல வழி சொல்ல பணியாளர் வந்திருந்தார். அவரின் வழிகாட்டுதலின்படி மேலும் கரடு முரடான மலை சரிவான சாலையில் பயணித்து Resort வந்தடைந்தோம்.
ஓரளவுக்கு வெயிலின் தாக்கம் தணிந்து மலை - மரம் - காற்று - சில்லென்ற சீதோஷண நிலைபாட்டுக்கு மாறியிருந்தோம். மேலும், அவரவர்கள் மூட்டை முடிச்சுகளை எல்லாம் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைகளில் வைத்துவிட்டு Resort - ன் பின்புறத்தில் பவானி ஆறு ஓடுகிறது என்று எங்களை அழைத்து சென்றனர். சூடான பஜ்ஜியுடன் Welcome Drink - கான டீ கொடுத்தனர். பவானி ஆறு மற்றும் Resort ஐ கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்தவுடன் சற்று இளைப்பாறினோம்.
அதன் பின்னர், நண்பர்கள் சில நேரம் கூடி அமர்ந்து குழு விளையாட்டுகள் விளையாடினோம். பாட்டுக்கள், நடனம், மிமிக்ரி, கேரம் போர்டு விளையாட்டு என சில நேரம் கடந்தது.
சில்லென்ற சீதோஷண பகுதிகளில் இரவில் எப்போதும் Bon-Fire என்றும் Camp-Fire என்றும் அழைக்கப்படும் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டோம். மேலும், அதே Bon-Fire - ல் பார்பெக்யூ எனப்படும் திறந்த வெளிப் பெரும் விருந்து எங்களுக்காக அரம்பமானது. சைவ - அசைவ உணவுகள் அவரவர்கள் விருப்பதிற்கேற்றவாறு பரிமாறப்பட்டது.
இரவு உணவை செரிக்க செய்ய சிறிது நேரம் காலாற நடந்துவிட்டு வந்து மீண்டும் கேரம் போர்டில் சில ஆட்டங்களை முடித்துவிட்டு களைப்பாக இருக்கவே உறங்க சென்றோம். நண்பர்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பேசியும், கேரம் போர்டு விளையாடியும் பொழுது போக்கினர்.
நேரம் செல்ல செல்ல குளிர ஆரம்பிக்கவே போர்வையை இழுத்துப் போர்த்தியவாறே தூங்கிக்கொண்டிருந்தோம். இடையில் நண்பர்கள், சில காட்டு விலங்குகளை பார்த்தோம் என்றும் அவை இங்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பேசிக்கொண்டிருந்தனர். (தூக்கத்தில் கேட்டது..). சுமார் நான்கு மணியளவில் காட்டு நாய்கள் நடமாட்டம் இருக்கிறதென்றும் அவை இங்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் நண்பர் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டிருந்தார். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று வந்த பயணக் களைப்பில் தூங்கிக்கொண்டிருந்தோம்.

0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment