Friday, 25 November 2011

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்:



1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது

2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்

3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்

5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்

4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்
Read More

சமச்சீர் கல்வி - புத்தகங்கள் இணையத்தில்

1 முதல் 12 ஆம் வகுப்பு முடிய அனைத்து புத்தகங்கள் இணையத்தில், இதனை செயல்படுத்திய நண்பர் ரவி அவர்களுக்கும் அவருடைய நிறுவனத்திற்கும் என்றென்றும் நன்றியுடன்.

இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றூம் ஆசிரியர் பயிற்ச்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்ச்சி ஆங்கில மற்றூம் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றூம் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ண்மும் அதன் பயன்பாடும்......

1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியை தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியை சுமக்க தேவையில்லை.

2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்க்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.

3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்ல்து தெட அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.

4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்த பக்கத்தை "பேஜ் மார்க்" செய்து ஆசிரியர்க்கோ அல்ல்து பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள் அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்த பக்கங்கள் கிடைக்கும்.

5, பரிட்ச்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ சிலபஸுக்காக வெயிட் பண்ண தெவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்க்கான புத்தகம் உடனே எடுத்து விடுமுறையில் பயிற்ச்சி செய்யலாம்.

6. மாதிரி வினாத்தாள் மற்றூம் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றூம் கடந்த உரண்டு வருட கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்ச்சி செய்யலாம்.

7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்த புத்தகத்தை அல்ல்து தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்தலாம்.

8. பள்ளீ மற்றும் டுட்டோரியல் கல்லூரிகளில் "புரஜக்டர்" மூலம் இனைத்தால் இந்த ஈ புத்தகத்தை பெரிய திரையில் காண்பித்து எல்லொரும் படிக்க ஏதுவாக இருக்கும்.

9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.

10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகபடுத்தபடுகிறது.

இந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்த பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஸல் நோட்ஸ் உங்கள் கன்னுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து. அத்னால் அதுவே உங்களுக்கு படிக்கும்.

இது ஒரு இலவச கல்வி சேவை. இதற்க்காக மூன்று சர்வர்கள் (அமெரிக்கா / கனடா மற்றூம் இந்தியாவில்) நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2 - 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக டிக்க ஏதுவாக ஹைஸ்பீட் பேன்ட்வித் டேட்டா சென்டரில் ஹோஸ்ட் செய்யபட்டுள்ளது.
  
www.samacheeronline.com
www.samacheerkalvi.info
www.samacheerkalvionline.in
Read More

Friday, 11 November 2011

111111

அபூர்வமான இந்த நாளில் எனது வலைப் பூவில் இந்த இடுகையை இடுவதில் பெருமைப் படுகின்றேன். நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதே நாளில் இணைவோம் :-)
Read More

அண்ணா நூற்றாண்டு நூலகம் - எனது பார்வையில்

அண்ணா நூற்றாண்டு நூலகம் - மாற்றம் பற்றி பல்வேறு பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், இட்லிவடை ன் இந்த இடுகை எனது வலைப்பூவில்.

தினமணி தலையங்கம்:

"கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக? நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், "ரொம்ப ஓவர்!'"

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன?

சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?

சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?

உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்?

நூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்! 


எனது சொந்தக்   கருத்து:

இந்நூலகம் 8 ஏக்கர் பரப்பில் தரைத்தளத்துடன் 8 மாடிகள் கொண்டு அமைந்துள்ளது. மாடிக்குச் செல்ல படிகள், தானியங்கி (லிஃப்ட்), எஸ்கலேட்டர் (நகர்வு தளம்) உள்ளது. முதல் தளம் குழந்தைகளுக்கானது. மற்றும் நாளிதழ்கள், சஞ்சிகைகள் என பொது நூல்களுக்கான தளமும் அங்கு உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. 5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகளும், 6-வது தளத்தில் அரசு ஆவணங்களும், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ-வீடியோ தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும், பிறவும் 8-வது மாடியில் அமைந்திருக்கிறன.

இந்த நூலகத்தின் முக்கியமான சிறப்பு குழந்தைகளுக்கான பகுதிதான். குழந்தைகள் தானாகவே செயல் வழிக் கற்றல் மூலம் படிக்கவும், ஆடிப் பாடி விளையாடவும், கணிணி மூலம் கற்கவும், பொழுது போக்கவும் மிகச் சிறப்பான வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்காண உள்நாட்டு, வெளிநாட்டுப் புத்தகங்கள் உள்ளன.  கண்ணைக் கவரும் ஓவியங்கள் சிறப்பு. குழந்தைகள் விளையாட தனியாக உள் விளையாட்டு அரங்கம் உள்ளது வெகு சிறப்பு. குழந்தைகளுக்கு வசதியாக முதல் தளத்திலேயே இவை அனைத்தும் அமைந்துள்ளன.

பல லட்சம் நூல்கள் கொள்ளளவு கொண்ட, 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய இந்நூலகத்தின் முக்கியமான சிறப்பு,  கூட்ட அரங்கு, கலை அரங்கு, கருத்தரங்கு என சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கும், 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளது தான்.

இந்நூலகம், முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.  மாற்றுத் திறன் உடையோர் எளிதில் வந்து செல்லும் வண்ணம் தனிப் பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் சிறப்பு நூலக அரங்கும் தரைத் தளத்திலேயே அமைந்துள்ளது சிறப்பானது.  பொதுமக்கள் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் இந்நூலகத்தைப் பயன்படுத்தலாம். தானியங்கி வசதி கொண்ட இணைய மின் நூலகம் உள்ளதுடன் யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் அகலக் கற்றை (பிராட் பேண்ட்) மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட, 180 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்நூலகம் தமிழக அரசின் மிகப் பெரிய சாதனை என்றால் அது மிகையில்லை. ஆனால் இந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கிராம, நகர்ப்புற நூலகங்களை மேலும் தரம் உயர்த்தினால் அது பலரும் வந்து வாசிக்க வழி வகுக்கும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களுமே புதிய புத்தகங்கள். நீங்கள் எழுதியிருப்பது போல பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்ற புத்தகங்கள் இங்கு வைக்கப்படவில்லை. 

தினமணி தலையங்கத்தில் ஏதோ நூலகத்தை அதிமுக அரசு அகற்றக்கூடாது என்பதற்காக எழுதப்பட்டதுபோல தெரிந்தாலும்கூட, ஒரு சொம்பு பாலில் ஒரு துளி விஷத்தைக் கலப்பதைப்போல எழுதப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக் காட்டாமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.

கொசுறு:
நல்லவேளை!கோபாலபுரமும்,போயஸ் தோட்டமும் மிக அருகாமையில் உள்ளன இல்லையென்றால் கூடங்குளம் மின் நிலையம் கோபாலபுரதிற்கு மாற்றப்பட்டிருக்கும்!

நாயர்: பீச் பக்கம் இருக்கும் கண்ணகி எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
மாடிப்படி மாது: ராணிமேரிகல்லூரி!!! அதை மறந்துட்டீங்களே! 

தமிழ்நாடு அடுத்த 55 மாதங்களுக்கு எதிர்நீச்சல்தான்!

Read More

Thursday, 10 November 2011

பூம்புகார் - அன்று :-) இன்று :-(

சமீபத்தில், பூம்புகார் நகருக்கு சென்று வந்ததன் காரணமே இந்த இடுகை. 

அன்று:

தமிழ் காப்பிய இலக்கியங்களில் போற்றப்படும் பூம்புகார் நகர், 1800 ஆண்டுகளுக்கு முன், உலகின் தலை சிறந்த துறைமுகப் பட்டினமாகவும், சர்வதேச வர்த்தகச் சந்தையாகவும் விளங்கியது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை உள்ளிட்ட நூல்களில் வர்ணிக்கப்பட்டது பூம்புகார். இன்ன பிற வகையாலும் சிறந்து விளங்கிய பூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்தது. பூம்புகார் நகரின் பிரதான வீதிகள், வானுயர்ந்த மாட மாளிகைகள், உப்பரிகைகளுடன் கூடிய கலை நயமிக்க வீடுகள், சமய வழிபாட்டு விகாரைகள் என எதுவுமே தப்பவில்லை. 

1973 ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக அரசு பூம்புகார் என்னும் அழிந்துபோன நகருக்கு மறு வடிவம் கொடுத்தது. பல வகையிலான புராதான சின்னங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வழி வகை செய்தது. அவை, சிலப்பதிகார கலைக்கூடம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், நெடுங்கால் மன்றம், கொற்றப் பந்தல் இன்னும் பல அதில் அடக்கம். 

அவை யாவும் இன்றைய தலைமுறையினர் பூம்புகாரையும் அதன் வரலாற்று நினைவுகளையும் அறிந்து கொள்ள எதுவாக இருந்தது.

இன்று:

சிலப்பதிகார கலைக் கூடத்தை தவிர அனைத்து சின்னங்களும் சரியாக பராமரிக்கப் படாமல் முட் புதர்களும், ஆடு - மாடுகள் மேய்வதாகவும் காணக் கண்டேன். கலங்கரை விளக்கம், நெடுங்கால் மன்றம், இலஞ்சி மன்றம் ஆகியவை எதில் அடக்கம். சரியாக பராமரிக்க அரசை வேண்டும் சாதாரண பிரஜை.

   

Read More

Wednesday, 2 November 2011

ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 11
ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!
ஒரு நகரத்தில் ஒரு வணிகர் இருந்தார். அவர் படிப்பறிவில்லாதவர். அவர் கடையில் விற்காத பொருள்கள் குறைவு. எல்லாவற்றையும் தன் கடையில் வாங்கி வைத்திருந்து விற்பார். சில பொருட்கள் அவர் கடையில் மட்டுமே கிடைக்கும் என்கிற அளவுக்கு பிரபலமாக இருந்தானர். பல வருடங்களாக வெற்றிகரமாக வியாபாரம் நடத்தி வந்த அவர் உடல்நிலை தளர ஆரம்பித்தது. கண்பார்வை மங்க ஆரம்பித்தது. காதுகளும் சரியாக கேட்காமல் போகவே தன் தொழிலை மகனிடம் ஒப்படைக்க நினைத்தார். மகனை நிறைய படிக்க வைத்திருந்தார். படித்து முடித்து மகன் பெரிய நகரத்தில் வேலையில் இருந்தான்.
அவரது கடை லாபத்தில் பத்து சதவீதத் தொகையைக் கூட சம்பளமாக வாங்காத மகனிடம் அந்த வேலையை விட்டு வந்து கடையைப் பார்த்துக் கொள்ள சொன்னார். மகனும் வந்தான். தந்தை வியாபாரம் நடத்தும் முறையைக் கண்ட மகன் சொன்னான். “அப்பா இப்போது உலகமெங்கும் பொருளாதாரம் சரிவடைய ஆரம்பித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டு விட்ட நிலையில் நம் நாடெல்லாம் ஒரு பொருட்டல்ல. வரப் போகும் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லா விட்டால் பிற்காலத்தில் நிறைய கஷ்டப்பட வேண்டியதாகி விடும்
அவர் பயந்து போனார். இப்போதைய உலகப் பொருளாதார நிலையை அவர் அறியாதவர். அமெரிக்கா பணக்கார நாடென்று கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நாடு கூட பொருளாதார சரிவை சந்தித்திருக்கின்றதென்றால் நிலைமை பூதாகரமானதாகத் தான் இருக்க வேண்டும். அவரோ தன் சொந்தத் தொழில் தவிர வேறு எந்த பொது அறிவும் இல்லாதவர். அறிவாளிகளோடு அதிக பழக்கமும் இல்லாதவர். வியாபாரம் ஒன்றே கதி என்றிருந்தவர். மகனோ மெத்தப் படித்தவன். பல டிகிரிகள் வாங்கியவன். உலக நடப்புகள் தெரிந்தவன்.
“மகனே என்ன செய்ய வேண்டும் என்று சொல்
“இப்படி தேவையில்லாமல் கண்ட கண்ட பொருள்கள் எல்லாம் வாங்கி விற்கிற வேலை எல்லாம் வேண்டாம். அதெல்லாம் ஆபத்தானது
இத்தனை நாட்கள் அப்படி செய்து தானே மகனே இத்தனை சொத்து சேர்த்திருக்கிறேன்
அப்பா அந்தக் காலத்தில் எப்படியோ என்னவோ செய்து நிறைய சம்பாதித்து விட்டீர்கள். அந்தக் காலம் போல் அல்ல இந்தக் காலம். இப்போது காலம் மாறி விட்டது. காலத்தை அனுசரித்து நாம் மாறா விட்டால் நாம் நஷ்டப்பட வேண்டி வந்து விடும்
பயந்து போன அவர், சரி மகனே நீ எப்படி குறைக்க வேண்டுமோ குறைத்துக் கொள்என்றார்.
தந்தையின் வாணிபத்தில் மகன் தன் அறிவுக்கு எட்டாத, தன் விருப்பத்திற்கு ஒவ்வாத பொருள்களை எல்லாம் வாங்கி விற்பதை நிறுத்தி விட்டான். ஒரு காலத்தில் கிடைத்தபடி எல்லாப் பொருள்களும் இந்தக் கடையில் கிடைக்கும் என்ற நிலை இல்லை என்பதால் பெரும்பாலோர் அந்தக் கடைக்கு வந்து பொருள்கள் வாங்குவதை நிறுத்திக் கொண்டார்கள். வேறு கடைகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். நாளாவட்டத்தில் வியாபாரம் சரிந்து கொண்டே வந்தது.
மகன் தந்தையிடம் சொன்னான். “அப்பா நான் சொன்னபடி வியாபாரம் குறைய ஆரம்பித்து விட்டது பார்த்தீர்களா? முதலிலேயே நான் எச்சரிக்கை செய்து நாம் ஜாக்கிரதையாக இருந்ததால் பெரிய நஷ்டப்படாமல் தப்பித்தோம். நீங்கள் முன்பு செய்து வந்த மாதிரியே நாம் இப்போதும் வியாபாரம் செய்து வந்திருந்தால் விற்பனை இல்லாமல் பொருள் தேங்கி நாம் நிறைய நஷ்டப்பட்டிருப்போம்.
அந்த வணிகருக்கு ஆமென்று பட்டது. என்ன இருந்தாலும் படித்தவன் படித்தவன் தான் என்று நினைத்துக் கொண்டார்.
மேலே சொன்ன உதாரணத்தில் அந்த வணிகரின் தொழிலின் வெற்றிக்கு ஒரு முக்கியமான அடிப்படைக் காரணம் இருந்தது. மற்ற கடைகளில் கிடைக்காத பொருட்களைக் கூட தன் கடையில் அவர் தருவித்து வைத்திருந்ததால் அவர் கடையைத் தேடி வரும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்கள் அந்த பொருட்களுடன் மற்ற இடங்களில் கிடைக்கும் பொருட்களையும் கூட ஒரே இடத்தில் இதையும் வாங்கிக் கொள்ளலாம் என்று வாங்கிச் சென்றதால் வியாபாரம் செழித்தது.
ஆனால் மகன் அதி மேதாவியாய் உலகப் பொருளாதார அளவில் சிந்தித்து அதற்கும் தந்தையின் வாணிபத்திற்கும் முடிச்சு போட்டு அதன் மூலம் ஏதோ ஒரு முடிவெடுத்தது முட்டாள்தனம். அதற்கு பதிலாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எத்தகையவர்கள், அவர்கள் தேவைகள் என்ன, எதனால் மற்ற கடைகளை விட்டு இங்கு வருகிறார்கள் என்ற வியாபார அடிப்படை அறிவில் சிந்தித்திருந்தால் வியாபார விருத்தி ஏற்பட்டிருக்கும். ஒழுங்காக சென்று கொண்டிருந்த வியாபாரத்தைக் கெடுத்ததுமல்லாமல் தான் அதைப் பெரிய நஷ்டத்திலிருந்து காப்பாற்றியதாக மகன் நினைத்ததும், தன் சொந்த அறிவையும் அனுபவத்தையும் விட மகன் அப்படி சொன்னதை அந்த தந்தை நம்ப ஆரம்பித்ததும் தான் வேடிக்கை.
பலரது கல்வி அவர்களுக்கு அதி மேதாவிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிகம் படித்திருந்தால், பெயர் போன கல்விக்கூடங்களில் படித்திருந்தால் அத்தனை அறிவையும் பெற்று விட்டோம் என்ற கர்வத்தையும் தந்து விடுகிறது. அதனால் தான் எண்ணிலடங்கா தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் பலரும் நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்டு விடுகிறார்கள். இந்த உலகம் அவர்களுக்கு உரிய கௌரவத்தையும், வெற்றியையும் தரத் தவறி விட்டது என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
வாழ்க்கையில் எதற்கு என்ன தேவையோ அதை முக்கியமாக அறிந்திருங்கள். அந்த அறிவு கல்விக்கூடங்களில் கிடைக்கலாம், அதற்கு வெளியிலும் கிடைக்கலாம். அந்த அறிவே அந்த விஷயத்திற்கு உங்களுக்கு உதவும். அதில் வெற்றி பெற்றவர்களுடைய அனுபவத்தை, அவர்களின் செயல் முறையை உற்று கவனியுங்கள். அதன் மூலம் கிடைக்கும் அறிவு ஆயிரம் சான்றிதழ்களாலும் கிடைத்து விடாது. அதை எந்த பள்ளிக்கூடத்திலும் கற்றுக் கொண்டு விட முடியாது.
பாடசாலைகளில் கிடைக்கும் கல்வியறிவு முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிலேயே அத்தனை அறிவும் அடங்கி விடுகிறதென்று யாரும் முடிவுகட்டி விடக் கூடாது. ஏட்டில் இல்லாதது, கல்விக்கூடங்களில் கற்க முடியாதது எத்தனையோ இருக்கிறது. கல்வியறிவு சுயமாய் சிந்திக்கும் திறனுக்கு என்றுமே நிகராகி விடாது. உண்மையாகச் சொல்வதானால் கல்வியறிவே சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளும் சமயோசித  அறிவுடன் இணையா விட்டால் வாழ்க்கைக்கு உதவாது.  இதை என்றும் நினைவில் நிறுத்துவது நல்லது.
நன்றி: வல்லமை
Read More

Aadhaar - Identity Card

'ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது.
இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.
இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல் போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.
அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும். மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena