சமீபத்தில், பூம்புகார் நகருக்கு சென்று வந்ததன் காரணமே இந்த இடுகை.
அன்று:
அன்று:
தமிழ் காப்பிய இலக்கியங்களில் போற்றப்படும் பூம்புகார் நகர், 1800 ஆண்டுகளுக்கு முன், உலகின் தலை சிறந்த துறைமுகப் பட்டினமாகவும், சர்வதேச வர்த்தகச் சந்தையாகவும் விளங்கியது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை உள்ளிட்ட நூல்களில் வர்ணிக்கப்பட்டது பூம்புகார். இன்ன பிற வகையாலும் சிறந்து விளங்கிய பூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்தது. பூம்புகார் நகரின் பிரதான வீதிகள், வானுயர்ந்த மாட மாளிகைகள், உப்பரிகைகளுடன் கூடிய கலை நயமிக்க வீடுகள், சமய வழிபாட்டு விகாரைகள் என எதுவுமே தப்பவில்லை.
1973 ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக அரசு பூம்புகார் என்னும் அழிந்துபோன நகருக்கு மறு வடிவம் கொடுத்தது. பல வகையிலான புராதான சின்னங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வழி வகை செய்தது. அவை, சிலப்பதிகார கலைக்கூடம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், நெடுங்கால் மன்றம், கொற்றப் பந்தல் இன்னும் பல அதில் அடக்கம்.
அவை யாவும் இன்றைய தலைமுறையினர் பூம்புகாரையும் அதன் வரலாற்று நினைவுகளையும் அறிந்து கொள்ள எதுவாக இருந்தது.
இன்று:
சிலப்பதிகார கலைக் கூடத்தை தவிர அனைத்து சின்னங்களும் சரியாக பராமரிக்கப் படாமல் முட் புதர்களும், ஆடு - மாடுகள் மேய்வதாகவும் காணக் கண்டேன். கலங்கரை விளக்கம், நெடுங்கால் மன்றம், இலஞ்சி மன்றம் ஆகியவை எதில் அடக்கம். சரியாக பராமரிக்க அரசை வேண்டும் சாதாரண பிரஜை.
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment