10.03.2013 - மஹா சிவராத்திரி யை முன்னிட்டு ஸ்ரீ காளஹஸ்தி பெருமானை தரிசிக்க முந்தைய நாள் மாலையே சென்னையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீ காளஹஸ்தி வந்தடைந்தோம்.
சிவராத்திரிக்கு முந்தைய நாள் என்பதால் தேவஸ்தான தங்கும் அறைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தனியார் விடுதிகளுக்கோ கொழுத்த கொண்டாட்டம். அறை வாடகையெல்லாம் இரு மடங்கு உயர்த்தியிருந்தனர். நமக்கு வேறு வழி இல்லாது இரு மடங்கு வாடகையில் ஒரு அறையை பிடித்தோம். மாட வீதிகளில் விநாயகர், முருகர், ஞானபிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் வீதி உலா கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.
சிவராத்திரி அன்று (11.03.13) காலை 6 மணிக்கு கோவிலுக்குள் வந்து மதியம் 12 மணியளவில் மூலவரை தரிசனம் செய்துவிட்டு, அம்பிகையையும் தரிசனம் செய்தோம். சிவராத்திரியென்பதால் எந்த தோஷ, நிவாரண பூஜையும் இல்லை என்று கூறியிருந்தனர். 6 மணி நேரம் வரிசை ஒரு பாம்பு போல வளைந்து நெளிந்து சென்று சன்னதியை அடைந்தது. (கிட்டத் தட்ட ஒரு 4 கி. மீ இருக்கும் கோவிலுக்குள்ளேயே சுற்றியது). வயதானவர்களும், கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்களும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர்.
சிவராத்திரியை முன்னிட்டு மாட வீதிகள், பொன்முகலிகை ஆறு, கண்ணப்பர் மலை ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. அவை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
சிவபெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment