இணைய அரசன் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது.
http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.
தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும்.
தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும். நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழி பெயர்ப்பு தரப்படுகிறது. தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.
ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளது கூகுள். இந்த சேவை தற்போது Alpha பதிப்பாகவேவழங்கப்படுகிறது
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment