Tuesday, 30 August 2011

அன்னை தெரசா

உலகப் புகழ் பெற்ற சமூக சேவகியான அன்னை தெரசாவைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.1979 ல் அமைதிக்கான நோபல் பரிசையும், 1980 ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். அவரது வாழ்க்கை குறிப்பு:

இந்தியாவிற்கு வந்த தெரசா:

அன்னை தெரசா 27.8.1910 ல் மாசிட்டோனியா குடியரசில் பிறந்தார். அவரது இயற் பெயர் அக்னஸ் கொன்ச்சா. கடவுளுக்கு பணி செய்தும், ஏழை எளியவர்க்கு தொண்டாற்றியும் தன் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது. அதுவே அவர் இந்தியாவிற்கு வருவதற்கும் காரணமாக இருந்தது. 24.5.1931 ல் தெரசா 'இந்திய மக்களுக்கு தொண்டு செய்வதே என் வாழ்வின் இலக்கு' என்று உறுதி மொழி எடுத்தார்.

கொல்கத்த்தாவில் ஆசிரியராக பனி புரிந்த இவர், மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். ஆசிரியராக இருக்கும் போதே காச நோயால் பாதிக்கப்பட்டார். பள்ளியில் தான் வாழ்ந்த சற்று வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு 'ஏழைகளுக்கு தொண்டு செய்வதே கடவுளின் விருப்பம்' என்பதை உணர்ந்தார். நீல நிற கறையிட்டவெள்ளைப் பருத்தி துணியை அணிந்தார்.

ஆதரவற்றோர் சரணாலயம்:

கொல்கத்தாவில் தெருக்களிலும், குடிசைப் பகுதிகளிலும் ஆதரவற்று தவிக்கும் மனிதர்களை கண்டதும் அன்னை தெரசாவின் மனம் இறங்கியது. அவர்களை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல், அவர்களுக்கு உணவும். நீரும், மருந்துகளும் வழங்கினார்.

ஒரு நாள் கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது, அப்போது ஒரு பெண், மரண தருவாயில் தெருவோரத்தில் கிடந்தார்.அவளைக் கண்ட அன்னை தெரசா மனம் பதறினார். அவளை காப்பாற்ற அருகில் இருந்த ஒரு பாதுகாப்பான இடத்திருக்கு கூட்டிச் சென்றார். ஆனால் அப்பெண்ணோ இறுதி காலத்திலாவது தனக்கு ஒரு ஆதரவுக் கரம் கிடைத்ததே என்ற எண்ணத்தில் புன்னகையோடு அன்னையின் மடியிலே உயிர் துறந்தார்.

மறைவு:

1997 ம் ஆண்டு மலேரியா காய்ச்சலும், மஞ்சள் காமாலையும் சேர்ந்து அன்னையின் விடலை தாக்கியது. சுமார் ஒரு மாத காலமாக படுக்கையில் இருந்த அன்னையின் உடல் மிகவும் நலிவுற்றது. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டெம்பர் 5 ல் அவரது உடல் இந்த மண்ணை விட்டு பிரிந்தது.
Read More

Saturday, 20 August 2011

பொறியியல் கல்லூரிகளில் 44 ஆயிரம் இடங்கள் காலி!!

இது ஒரு ஒரு முன்னாள் பொறியியல் கல்லூரி மாணவனின் ஆதங்கம். ஓவ்வொரு வருடமும் அரசு புதிய தனியார் பொறியியல் கல்லூரிகளை துவங்க இசைவதற்கு பதிலாக, இருக்கின்ற பொறியியல் கல்லூரிகளின் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆவண செய்ய வேண்டும். ஏற்கனவே, பொறியியல் பட்டங்களை கையில் வைத்துக் கொண்டு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருப்போர்  பலர்.

சில கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. விண்ணப்பித்தோர் பலர் இருக்க, இந்த 44 ஆயிரம் இடங்களும் மாணவர்களால் தேர்வு செய்யப்படவில்லை என்பதே உண்மை. அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வீடு இருப்பதைப் போல கல்லூரியும் இருக்கின்றது. இரண்டு முறைக்கு மேல் அரசில் எந்தப் பதவியில் இருந்தாலும் அவருக்கு கல்லூரி இல்லை என்றால் அது ஒரு தவறான செய்கையாக கருதுகின்றனர். (ஒரு சிலரை தவிர?)


வருகின்ற கல்வி ஆண்டிலாவது இந்த அளவு காலியிடங்கள்  இல்லாத மாணவர் சேர்க்கையாக இருக்க வேண்டும் என விரும்பும்....
Read More

Friday, 5 August 2011

ஒரு பொய்.. தமிழ் சிறுகதை

இந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்ததனால் இடுகையாக இடுகிறேன்.

Nandri - http://selvasword.blogspot.com

ஒரு பொய்.. தமிழ் சிறுகதை

இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே பயணிகளின் கனிவான கவனத்திற்கு, சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 540 தற்போது புறப்பட தயாராக உள்ளது. இவ்விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் வாயில் எண் 7 வழியாக விமானம் நோக்கி செல்லவும்.

"ப்ரியா செல்லம், நம்ம flight வந்தாச்சு... வா போகலாம்".... தனது 8 வயது மகளை அழைத்தான் கார்த்திக்.
"அப்பா, வாயில்ன்னா என்னப்பா?"... அப்பாவியாய் கேட்ட மகளிடம்... "வாசல் டா கண்ணா"... என்று கூறி புறப்பட்டான்.

விமான பணிப்பெண்ணுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தனது முன்னால் செல்பவர் வழிவிடும் வரை நின்று பின் தனது இருக்காய் நோக்கி சென்றான். 12 A, B இருக்கையில் அமர்ந்ததும், "ப்ரியா, belt மாட்டிக்கோடா" என்று அவளுக்கு பெல்டை மாட்டிவிட்டான்.

"எப்பபாத்தாலும் ஜன்னல் சீட்ல நீயே உக்கார்ரப்பா.. திரும்ப வரும்போது நான் உக்காருவேன்"... சண்டையிட்ட ப்ரியாவிடம் "சரி டா".. என்று சொல்லி தனது புத்தகத்தை திறந்து படிக்கலானான்.

"கார்த்திக்!"... ப்ரியாவின் குரல் கேட்டு நிமிர்தவனுக்கு அதிர்ச்சி.... நினைத்துக்கூட பார்க்கவில்லை மீண்டும் ப்ரியாவை சந்திப்பான் என்று.... 4 ஆண்டுகள் பின் இன்று விமானத்தில் அவன் இருக்கைக்கு அருகில்.

"அப்பா உனக்கு இந்த ஆண்டியை தெரியுமா?"... ப்ரியா கேட்டாள்.... தெரியும் என தலையசைத்துவிட்டு.... அவளை நோக்கி.... "எப்படி இருக்கீங்க ப்ரியா?" என்று மட்டும் கேட்டுவிட்டு, தனது மகளை நோக்கி... "இவங்க பேர்தான் ப்ரியா.. அப்பா உனக்கு கதை சொல்லுவேன் இல்லயா... அந்த ஆண்ட்டி இவங்கதான்".... என்று அவள் காதில் மெல்லியதாய் கூறினான்.

அவள் இருக்கையில் அமர்ந்த பின்னும் நெகிழ்ச்சியில் இருவராலும் எதவும் பேசிக்கொள்ள இயலாததை உணரந்தவளாய் அந்த சிறுமி, ப்ரியாவை நோக்கி... "ஆண்ட்டி, என் பேர் கூட ப்ரியா தான், அப்புறம் எங்க அப்பா என்கிட்ட பொய் செல்லவே மாட்டார்"... அவ்வளவு ஸ்மார்டா பேசுகின்ற தன் பெண்ணை பார்த்து ஆச்சர்யத்தில் திளைத்தும் வெளிகொணராமல் புன்னகை உதிர்த்து தனது மகளின் தலை கோதினான்.

சில நிமிட மௌனத்தின் பின், அவளே மௌனத்தை உடைத்தாள்.

"நான் என்ன அவ்ளோ நல்லவளா கார்த்திக்?"... நெகிழ்ச்சியில் அவள் கேட்க்க, இவன் பதில் கூறும் முன், அவனது மகள் முந்திக்கொண்டு "ஆண்ட்டி இந்த dialog விண்ணைத்தாண்டி வருவாயா படத்துலையே கேட்டாங்க.. நீங்க ஒரு changeக்கு, நீங்க என்ன அவ்ளோ நல்லவரா கார்திக்ன்னு கேட்டிருக்கலாமே?"... என்று கூறி சிரித்தாள்.

"நீ ரொம்ப ஸ்மார்ட்டா பேசரடி".. என்று சிறுமியின் தலை தழுவி.... "உங்கம்மா வரலையா?" என்று கேட்டாள்... சிறுமி நிமிர்ந்து கார்த்திக்கை பார்க்க..."அவங்க already போய்ட்டாங்க.. திரும்பி வரும்போது ஒண்ணா வருவோம்".. என்றான்.

"நான் அவங்களை பார்க்கணுமே கார்த்திக்?".... கேட்டவளிடம் "கண்டிப்பா, ஒரு நாள் வீட்டுக்கு வாங்க"... என்று கூறினான்.

"அப்பா நான் bathroom போயிட்டு வர்றேன்"...என்று சொல்லி ப்ரியா அங்கிருந்து அகன்றாள்

"எப்போ adopt பண்ணீங்க கார்த்திக்?"....
"Processing 2 வருஷம் ஆச்சு, இப்போ எங்களோட வந்து 1.5 வருஷம் ஆச்சு"...

மீண்டும் மௌனம் நிலவ.... "நீங்க சந்தோஷமா இருக்கறத பார்க்க சந்தோஷமா இருக்கு"... மனதுக்குள் கூரியவளாய்... நீங்க ப்ரியாகிட்ட ஏன் பொய் சொல்றதில்லன்னு கேட்டாள்...

அதெப்படி பெண்கள் மட்டும் தங்கள் எல்லா கேள்விக்கும் விடை தேடுகிறார்கள்?... அதுமட்டுமல்லாது எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்டு விடுகிறார்கள்... என்று நினைத்துக்கொண்டே சிறிதாய் ஒரு புன்னகை மட்டும் உதிர்த்து மௌனத்தை பதிலாய் தந்தான்.... சில விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட சொல்லாமல் புரியவைக்க கற்றுகொடுத்த குருவே அவள்தான்!.... புரிந்து கொண்டவளாய் மேலும் தொடராமல் "ப்ரியான்னு பேர் வச்சிட்டாலே ஸ்மார்ட் ஆயிடறாங்கல்ல"... என்று கூறி புன்னகைத்தாள்....

டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும், "கண்டிப்பா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வர்றேன் கார்த்திக்" "take care டா குட்டி "... என்று சின்ன பெண்ணிடம் கூறிவிட்டு விடைபெற்றாள்.

அவள் சென்றதும் கார்த்திக்கிடம் சிறுமி "அப்பா இதுவரைக்கும் நீங்க ப்ரியாகிட்ட சொன்ன உண்மைகளை விட இன்னிக்கு நீங்க அம்மா இருக்காங்கன்னு சொன்ன பொய் ரொம்ப ரொம்ப உயர்ந்ததுப்பா".... என்று சொல்ல.... அவளை அணைத்து முத்தமிட்டான்.

"அவங்க வீட்டுக்கு வந்தா என்னப்பா பண்றது?".. என்று அறியாமல் கேட்ட சிறுமியிடம்... "அவங்க வரமாட்டாங்க டா".... என்று சொல்லி நடக்கலானான்.

பல கதைகளின் இனிமையை உணர்வதற்கு அதன் கசப்பான முடிவுகளே காரணம்...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena