Tuesday 30 August 2011

அன்னை தெரசா

உலகப் புகழ் பெற்ற சமூக சேவகியான அன்னை தெரசாவைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.1979 ல் அமைதிக்கான நோபல் பரிசையும், 1980 ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். அவரது வாழ்க்கை குறிப்பு:

இந்தியாவிற்கு வந்த தெரசா:

அன்னை தெரசா 27.8.1910 ல் மாசிட்டோனியா குடியரசில் பிறந்தார். அவரது இயற் பெயர் அக்னஸ் கொன்ச்சா. கடவுளுக்கு பணி செய்தும், ஏழை எளியவர்க்கு தொண்டாற்றியும் தன் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது. அதுவே அவர் இந்தியாவிற்கு வருவதற்கும் காரணமாக இருந்தது. 24.5.1931 ல் தெரசா 'இந்திய மக்களுக்கு தொண்டு செய்வதே என் வாழ்வின் இலக்கு' என்று உறுதி மொழி எடுத்தார்.

கொல்கத்த்தாவில் ஆசிரியராக பனி புரிந்த இவர், மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். ஆசிரியராக இருக்கும் போதே காச நோயால் பாதிக்கப்பட்டார். பள்ளியில் தான் வாழ்ந்த சற்று வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு 'ஏழைகளுக்கு தொண்டு செய்வதே கடவுளின் விருப்பம்' என்பதை உணர்ந்தார். நீல நிற கறையிட்டவெள்ளைப் பருத்தி துணியை அணிந்தார்.

ஆதரவற்றோர் சரணாலயம்:

கொல்கத்தாவில் தெருக்களிலும், குடிசைப் பகுதிகளிலும் ஆதரவற்று தவிக்கும் மனிதர்களை கண்டதும் அன்னை தெரசாவின் மனம் இறங்கியது. அவர்களை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல், அவர்களுக்கு உணவும். நீரும், மருந்துகளும் வழங்கினார்.

ஒரு நாள் கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது, அப்போது ஒரு பெண், மரண தருவாயில் தெருவோரத்தில் கிடந்தார்.அவளைக் கண்ட அன்னை தெரசா மனம் பதறினார். அவளை காப்பாற்ற அருகில் இருந்த ஒரு பாதுகாப்பான இடத்திருக்கு கூட்டிச் சென்றார். ஆனால் அப்பெண்ணோ இறுதி காலத்திலாவது தனக்கு ஒரு ஆதரவுக் கரம் கிடைத்ததே என்ற எண்ணத்தில் புன்னகையோடு அன்னையின் மடியிலே உயிர் துறந்தார்.

மறைவு:

1997 ம் ஆண்டு மலேரியா காய்ச்சலும், மஞ்சள் காமாலையும் சேர்ந்து அன்னையின் விடலை தாக்கியது. சுமார் ஒரு மாத காலமாக படுக்கையில் இருந்த அன்னையின் உடல் மிகவும் நலிவுற்றது. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டெம்பர் 5 ல் அவரது உடல் இந்த மண்ணை விட்டு பிரிந்தது.

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena