Happy New Year - 2014
புத்தாண்டு தொடக்கம் Shalom Mansion ல் நண்பர்களுடன் வழக்கம் போல் கொண்டாடி முடித்தாயிற்று. இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏனோ களை கட்டவில்லை என்றே தோன்றுகிறது.

01-01-2014: மிகச் சமீபத்தில் திருமலைக்கு சென்று பெருமாளை தரிசித்தபடியால் இம்முறை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புத்தாண்டு தரிசனம். வடபழநி முருகனையும் தரிசித்துவிடவேண்டும் என்று மனது அடித்துக் கொண்டமையால் வடபழநி ஆண்டவரை சேவிக்க கோவில் வரை சென்றாகிவிட்டது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம். Rs. 100, Rs. 50 மற்றும் தர்ம தரிசனம் என வகைபடுத்தியும் மிக அதிகமான கூட்டம். Q வில் நின்றால் 3 மணி நேரமாவது ஆகும் எனப் பட்டதால், வடபழனி ஆண்டவரை கோபுர தரிசனம் செய்து விட்டு நடையை கட்டினேன்.
நேரே மாயாஜால் பயணம். (அது என்ன மாயமோ தெரியவில்லை, ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் மாயாஜாலில் மட்டுமே டிக்கெட் கிடைக்கின்றது!!!). கிழக்கு கடற்கரை சாலையில் போகிற வழி எங்கும் புகழ் பெற்ற கோவில்கள் (சாய் பாபா, ISKCON, பூரி ஜெகந்நாதர் etc.), உணவகங்கள் அதிகம் இருப்பதாலும் விடுமுறை தினத்தன்று இந்த சாலை அதிகபட்ச மக்களால் பயன் படுத்தப்படுவதால் எங்கு காணினும் போக்குவரத்து நெரிசல்.
நண்பர்களுடன் மாயாஜாலில் ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா மற்றும் பலர் நடித்த "என்றென்றும் புன்னகை" திரைப்படம் பார்த்தேன். (மேற்கூறிய காரணத்தால் அரை மணி நேரம் தாமதமாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன்). ஒரு வித்தியாசமான கதைக்களம். திருமணமே செய்ய மறுக்கும் இளைஞர்கள், சூழ்நிலைகளினால் மாறி திருமணம் செய்து கொள்ளும் கதை.
திரைப்படம் முடிந்தபின், சோழிங்க நல்லூரில் இல்ல ISKCON கோவில் சென்று ராதா கிருஷ்ணரை வழிபட்டோம். கோவிலின் அமைப்பு மிக நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. ISKCON கோவில் கட்டுமானம் பிற ISKCON கோவிலைப் போலவே இருக்கின்றது. முன்பொருமுறை பெங்களூரு ISKCON கோவில் சென்று வந்திருக்கிறேன்.
மாலை மீண்டும், ECR ல் பயணித்து வேட்டுவான்கேணி பகுதியில் உள்ள "BASERA" என்ற சிறப்புக் கூறு உணவகத்தில் உணவருந்தினோம். BASERA உணவகம் ஒரு Garden Theme ல் உருவாக்கப்பட்டுள்ளது. இருட்டான அந்த Garden அமைப்பில், மேஜையில் மெழுகுவர்த்தி வெளிச்சம் தான். (ஆங்கிலத்தில், Candle Light Dinner என்கிறார்கள்).
மொத்தத்தில், வழக்கம் போல ஒரு புத்தாண்டு தினத்தை மகிழ்வுடன் கொண்டாடிய நிறைவுடன் கலைந்தோம்.

0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment