தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். இரவு மணி சுமார் 11 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும். ஆள் அரவமில்லாத அந்த தெருவில் இரவு நேரத்து வாசிகளான நாய்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன.
4 முதல் 5 தெரு நாய்கள் ஒன்றாக நின்றுகொண்டிருந்தன ஒரு வீட்டின் முன்னால். அதே வீட்டினுள்ளிருந்து எஜமானருடன் மேல் ஜாதி வகை நாய் நடை பயிற்சிக்காக (வாக்கிங்) வந்து கொண்டிருந்தது. எஜமானர் மற்ற தெரு நாய்களின் அட்டகாசத்தை பார்த்துவிட்டு தனது மேல் ஜாதி நாயிடம்,
"ஜிம்மி போகாதே, அங்கே நாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. பார்த்தால் உன்னை கடித்துவிடும்!!!"
என்று உரையாடுகின்றார். இதை நாய் பாசம் என்பதெல்லாமல் வேறேன்பது?
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment