Thursday, 27 December 2012

ராணி திலக்

தமிழில் கவிதைகளின் பெருக்கத்தை ஒப்பிடும்போது கவிதை விமர்சனங்கள் மிகவும் அரிதாகவே எழுதப்படும் சூழல் இது. இப்பின்னணியில் சமகால நவீன கவிஞர்களில் முக்கியமானவர் ராணி திலக்.


சப்தரேகை, ராணி திலக், அனன்யா வெளியீடு, 8/37, பி.ஏ.ஓய் நகர், குழந்தை ஏசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-5, விலை 100ரூ

26 கவிஞர்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளது முக்கியமானது. பிரம்மராஜன், நகுலன், ஸ்ரீநேசன் பற்றிய கட்டுரைகள் அவர்களது கவிதை உலகத்தை ஆழமாகப் பேசுபவை. அவசரகதியிலும் மேலோட்டமாகவும் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளும் இதில் உள்ளன. சமகாலத்தில் இயங்கும் கவிஞர்களின் கவிதை உலகம் குறித்த அறிமுகத்திற்கு சப்தரேகை கட்டுரைகள் நிச்சயம் உதவும்.

கவிதை பற்றிய கோட்பாடுகள், கவிஞர்களால் மட்டுமே வாசிக்கப்படும். மிகக் குறைவாகவே அத்தகைய எழுத்துக்கள் வருகின்றன. ஆனால், மொழியின் அழகியலை நுணுக்கமாக விவாதிப்பவை அவையே. விரிந்த கோணத்தில் ஒரு காலகட்டத்தின் கருத்துகளையும் உணர்ச்சிகளையும் மொழி எப்படி எடுத்து தன்னுடைய ஆழத்துக்குக் கொண்டு செல்கிறது என்பதைக் காட்டுபவை அவை. இளைய தலைமுறை கவிதை விமர்சகரான ராணிதிலக்கின் இக்கட்டுரைகள் முக்கியமான சில தளங்களைத் தொட்டு விவாதிப்பவை.

ராணி திலக் - வலைப்பூ 

2012 ஆம் ஆண்டின் சிறந்த 10 புத்தகங்களில் ஒன்றாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் தெரிவு செய்யப் பட்டு, குங்குமம் இதழில் வெளியானது.
Read More

சச்சின் ரமேஷ் தெண்டுல்கர்




சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில் அவரால் ஓர் அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாகத் தொடர்ந்து ஆடி வரும் இவர், தேர்வுப் போட்டிகளில் 15,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 18,000 ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார். - நன்றி: விக்கிபீடியா 

ஒரு துறையில் இருபத்தி மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை என்பதே சாதனைதான். அதிலும் சாத்தியமான உச்சபட்ச சாதனைகளோடு நீண்டகால சேவை என்பது “இனிமேல் ஒருத்தன் பிறந்துதான் வரணும்” என்கிற வார்த்தைக்கு மிகப் பாந்தமாக பொருந்துகிறது.

இதனால்தான் சச்சின் தான் வாழும் காலத்தின் அடையாளமாக வரலாற்றில் அறியப்படப் போகிறார். கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் பாக்கியம் அது. கலைஞர்-எம்.ஜி.ஆர், ரஜினி-கமல், இளையராஜா-ரகுமான் என்று அவரவர் காலக்கட்டத்தின் அடையாளங்களாக மாறிப்போனவர்களுக்கு சமமான இன்னொரு எதிர்போட்டியாளரும் சமகாலத்தில் இருந்திருப்பார். சச்சினுக்கு நிகராக மட்டுமல்ல, அவரை நெருங்கக்கூடியவர்களும் கூட அவர் காலத்தில் இல்லை. அவ்வாறு சச்சினுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டவர்களும் கூட கடைசியில் சச்சினுக்கு சரணகோஷம் போட்டுவிட்டு ஓய்வெடுத்ததுதான் வரலாறு.

‘கிரிக்கெட் ஒரு மதமென்றால், சச்சின்தான் அதன் கடவுள்’ என்கிற வாக்கியம் சும்மா போகிறபோக்கில் சொல்லப்பட்டதல்ல. சச்சின் இல்லாத கிரிக்கெட்டை நினைத்துப் பார்ப்பது இந்தியர்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம்தான். ஏனெனில் இங்கே ஒரு தலைமுறைக்கு சச்சின் என்றால் கிரிக்கெட், கிரிக்கெட் என்றால் சச்சின். “கவாஸ்கரும், ஸ்ரீகாந்தும் ஓபனிங் இறங்குறப்போ...” என்று பழம்பெருமை பேசும் பெருசுகளும் அவரை ரசித்தார்கள். சைக்கிள் ட்யூப் பால், தென்னை மட்டை பேட்டோடு தெருவில் கிரிக்கெட் ஆட இறங்கிய வாண்டுகளும் அவரை ரசித்தார்கள்.

அவரது கேரியரின் கடைசிக்கட்டங்களில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் எக்காலத்திலுமே மோசமாக விளையாடியவர் அல்ல என்பதே நிம்மதியாக இருக்கிறது.

குட்பை சச்சின்! 

- நன்றி: யுவ கிருஷ்ணா.
Read More

Saturday, 22 December 2012

21-Dec-2012 உலகம் அழிவு: மாயன் காலண்டர்

மாயன் காலண்டர் முடிவு, உலகம் அழியும், பூமி அதன் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி மீண்டும் இணைகிறது, பூமியின் மீது பெரிய இன்னொரு கோள் வந்து மோதப் போகிறது, பூமி மூன்று நாட்கள் இருண்டு விடும் என எத்தனை வியூகங்கள். அப்பப்பா!!!

இயற்கையை சீண்ட முடியாது, இயற்கையை எவராலும் கணிக்க (துல்லியமாக) முடியாது என்பதையே உணர்த்துகிறது இந்த இன்னொரு பீதி பொய்யாகிப் போனது.

நன்றி இறைவா!!! இன்னும் இந்த உலகம் எம் மக்களை வேண்டுமேன்றதற்க்கு.  
Read More

Thursday, 20 December 2012

2012-2013 மார்கழி உத்சவம்

2012-2013 மார்கழி உத்சவ நிகழ்வுகள் சென்னையில் வழக்கமான முறையில் பல்வேறு இடங்களில் நடை பெற்றுக் கொண்டிருகிறது,

இசை ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவரும் இந்த சீசனை எதிர்பார்த்து காத்திருந்தனர். வாணி மகாலில் "ஞானம்பிகா கேட்டரிங் சர்வீஸ்" நிறுவனத்தினர் உணவு சாலை அமைத்திருந்தனர்.

இன்று, அங்கு சென்று மதிய உணவை ஒரு பிடி பிடித்தாயிற்று.  ஹி... ஹி...

சும்மா சொல்லக் கூடாது, ரவா கேசரி என்ன அருமை!!! என்ன சாப்பாட்டின் விலை தான் கொஞ்சம் அதிகம். (Rs. 125).

இன்னும் அடுத்தடுத்த சபாக்களில் முயற்சி செய்யலாம்.

Read More

Saturday, 15 December 2012

சென்னை புத்தக கண்காட்சி - 2013


நிகழிடம்:
YMCA உடற்பயிற்சி கல்லுரி மைதானம்,
நந்தனம்,
சென்னை - 35.

நிகழ் நாட்கள்: 11-ஜன-2013 முதல் 23-ஜன-2013 வரை
Read More

பூர்வ காவேரி (குடமுருட்டி)

இம்முறை (13-Nov-2012) தீபாவளிக்காக ஊர் சென்ற போது கிளிக்கியது. (செல்பேசியில் தான்...)




Read More

தஞ்சை மாவட்டம் - முத்துக்கள்

எனக்கு தெரிந்தவரை, தஞ்சை மாவட்டத்தில் பிறந்த ஆன்றோர் மற்றும் சான்றோர் பெருமக்கள் பின்வருமாறு:
  • தமிழறிஞர் மறைமலை அடிகள்
  • தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யர்.
  • தமிழறிஞர் தமிழ்வேள் உமா மகேஸ்வரனார்.
  • தமிழறிஞர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்.
  • தமிழறிஞர் கலைஞர்.
  • திருவையாறு தியாகராஜா சுவாமிகள் 
  • மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி
  • நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் இரா.நெடுஞ்செழியன் 
  • கணித மேதை இராமானுஜம்
  • மக்கள் தலைவர் கருப்பையா மூப்பனார் 
  • எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் 
  • காஞ்சி காமகோடி பீடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்(சுப்பிரமணியன்)
  • பட்டுக்கோட்டை ஆர்.வெங்கட்ராமன் (முன்னாள் இந்திய குடியரசு தலைவர்)
  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை 
  • உவமைக் கவிஞர் சுரதா
  • காளமேகப் புலவர் 
  • செம்மங்குடி சீனிவாசன் 
  • மணலி திரு.சி.கந்தசாமி
  • கல்கி கிருஷ்ணமூர்த்தி 
  • பாலகுமாரன் 
  • கரிச்சான்குஞ்சு 
  • வெங்கட்ராம் 
  • இயக்குனர் பாலச்சந்தர் 
  • இயக்குனர் ஷங்கர் 
  • நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 
  • நடிகை மோகினி 
  • நடிகர் டி. ராஜேந்தர் 
  • நடிகர் தியாகு 
குறிப்பு: இந்த பட்டியல் இன்னும் நீளும் என்ற நம்பிக்கையுடன்!!!!
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena