தமிழில் கவிதைகளின் பெருக்கத்தை ஒப்பிடும்போது கவிதை விமர்சனங்கள் மிகவும் அரிதாகவே எழுதப்படும் சூழல் இது. இப்பின்னணியில் சமகால நவீன கவிஞர்களில் முக்கியமானவர் ராணி திலக்.
சப்தரேகை, ராணி திலக், அனன்யா வெளியீடு, 8/37, பி.ஏ.ஓய் நகர், குழந்தை ஏசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-5, விலை 100ரூ
26 கவிஞர்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளது முக்கியமானது. பிரம்மராஜன், நகுலன், ஸ்ரீநேசன் பற்றிய கட்டுரைகள் அவர்களது கவிதை உலகத்தை ஆழமாகப் பேசுபவை. அவசரகதியிலும் மேலோட்டமாகவும் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளும் இதில் உள்ளன. சமகாலத்தில் இயங்கும் கவிஞர்களின் கவிதை உலகம் குறித்த அறிமுகத்திற்கு சப்தரேகை கட்டுரைகள் நிச்சயம் உதவும்.
கவிதை பற்றிய கோட்பாடுகள், கவிஞர்களால் மட்டுமே வாசிக்கப்படும். மிகக் குறைவாகவே அத்தகைய எழுத்துக்கள் வருகின்றன. ஆனால், மொழியின் அழகியலை நுணுக்கமாக விவாதிப்பவை அவையே. விரிந்த கோணத்தில் ஒரு காலகட்டத்தின் கருத்துகளையும் உணர்ச்சிகளையும் மொழி எப்படி எடுத்து தன்னுடைய ஆழத்துக்குக் கொண்டு செல்கிறது என்பதைக் காட்டுபவை அவை. இளைய தலைமுறை கவிதை விமர்சகரான ராணிதிலக்கின் இக்கட்டுரைகள் முக்கியமான சில தளங்களைத் தொட்டு விவாதிப்பவை.
ராணி திலக் - வலைப்பூ
ராணி திலக் - வலைப்பூ
2012 ஆம் ஆண்டின் சிறந்த 10 புத்தகங்களில் ஒன்றாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் தெரிவு செய்யப் பட்டு, குங்குமம் இதழில் வெளியானது.
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment