இம்முறையும் வழக்கம் போலவே, Shalom Mansion ல் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டின. நள்ளிரவு 12 மணி அடிக்கும் போது பக்கத்து அறை நண்பர்களின் வாழ்த்துக்களுடன், வாண வேடிக்கைகளுடன் இனிதே பிறந்தது இந்த நல்ல ஆண்டு.
Mansion மாடியில் இருந்து பார்த்தால் 360 டிகிரியிலும் சென்னை மாநகரம் வாண வேடிக்கைகளால் இரவை பகலாக்குவதைப் போல மின்னிய காட்சி காணக் கிடைக்காதது. Mansion வாசலில் நண்பர்களின் நடனங்கள், ஒரு அறை நண்பரின் பிறந்த நாள் கேக் ரோட்டில் வைத்து வெட்டியது, போகிற வருகிற கார் பைக்குகளை நிறுத்தி அவர்களுடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டது மனதுக்கு மிகவும் மகிழ்வளித்தது.
இந்த ஆண்டும் வழக்கம் போல "சகல கலா வல்லவன்" திரைப் படத்தில் வரும் "Hai Everybody Wish You Happy New Year" என்ற பாடலோடும் தான் தொடங்கியது. தமிழ் திரைப்படப் பாடலாசிரியர்கள் இந்தப் பாடலைப் போல இந்த ஆண்டாவது இன்னொரு பாடலை இயற்றுவார்களா?
நன்றி: மணி கண்டன், வீர மணிகண்டன், சிவக் குமார் மற்றும் வெங்கட் (இந்த புது வருடத்தை மறக்க முடியாமல் செய்ததற்கு)
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment