அகரம் நண்பர் சிவகுமார் அவர்களின் திருமண வரவேற்ப்பில் கலந்து கொள்வதற்காக வழக்கம் போல நீண்ட யோசனைக்குப் பிறகு வெள்ளிக் கிழமை (25-ஜன-2013) அரை நாள் விடுப்பெடுத்துக் கொண்டு சீர்காழி நோக்கிப் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணமானேன்.
மதிய நேர பயணம் செய்து நீண்ட நாட்கள் ஆகின்றது, எப்படி நேரத்தை பயனுள்ளதாக செலவழிப்பது என எண்ணி ஆனந்த விகடனும், புத்தக காட்சியில் வாங்கிய "தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் - எ. கே. செட்டியார்" புத்தகமும் எடுத்துச் சென்றேன். மத்திய கைலாசத்தில் பாண்டிச்சேரி பேருந்து கிடைக்கவே அங்கிருந்து பயனத்தை ஆரம்பித்தேன். நல்ல ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து மதிய நேர கடற்கரைச் சாலையை ரசிக்க முடிந்தது. பாண்டிச்சேரி எனக்கு மிகவும் பிடித்த ஊர். என்ன நேர்த்தியான சாலைகள் மற்றும் நகர அமைப்பு!!! வழி முழுக்க எங்கெங்கு சாலை ஓரங்கள் போரடிக்கிறதோ அப்போது விகடன் படிக்கலானேன். விகடனில் இப்போது செய்திகள் முன்பு போல தரமாக எல்லை என்பது எனது எண்ணம்.
பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சீர்காழிக்கு உடனடியாக பேருந்து கிடைக்கவே, நேரத்தை வீணடிக்காமல் அதில் அமர்ந்து பயணமானேன். கடலூர் வரும் வரை தமிழ்நாடு பயணக் கட்டுரைகளை வாசித்துக் கொண்டே வந்தேன். என்னே ஒரு சுகம் பழைய பயணக் கட்டுரைகளை வாசிக்கும் போது !!! என்ன ஊர் கட்டுரையை வாசிக்கிறோமோ அந்த ஊரிலேயே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பயணித்த ஒரு நினைவு.
சிதம்பரத்தில், நடராஜர் கோவிலில் முன்பு பேருந்திலிருந்தவாறு கும்பிடு போட்டுக் கொண்டு சீர்காழி நெருங்கியது பேருந்து. பேருந்தில் விசாரித்த போது திருமண மண்டபம் உள்ள விளந்திட சமுத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதனால் கொள்ளிட முக்கூட்டு என்ற இடத்திலிருந்து 1 கி. மீ நடக்க வேண்டுமென்றார்கள். மண்டபத்தை அடைந்து சிவகுமாருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு சொந்த ஊரான அய்யம்பேட்டை பயணமானேன். (இரவு உணவை மண்டபத்திலேயே முடித்துவிட்டுத்தான்) :-) (சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...)

0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment