அகரம் சிவகுமார் திருமண வரவேற்பை முடித்துக் கொண்டு, அய்யம்பேட்டை வந்த மறுநாள், ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் எடுப்பதாய் சொல்லவே குடியரசு தினமான அன்று வெகு நாட்களுக்குப் பிறகு பள்ளி சென்று பார்த்தேன்.
தேசியக் கொடியேற்றி முடித்து மேடையில் பேசிக் கொண்டிருந்தனர் ஆன்றோர் பெருமக்கள். வெளியே காத்திருந்து சில நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பசுமையான நினைவுகள் குடியரசு மற்றும் பள்ளிக்கு சுதந்திர தின நிகழ்சிகளுக்கு செல்வது. 8 ஆம் வகுப்பு வரை நான் தான் கொடிக்கு முன் நின்று உறுதி மொழி சொல்ல அனைவரும் வழி மொழிவர்.
ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எங்கள் வார்டுகளுக்கு சங்கீத மஹாலில் எடுக்கவிருப்பதாகவும், அதற்கான உபகரணங்களை தயார் செய்வதாகவும் அறிந்து அங்கு செல்ல முற்பட்டேன்.
இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு (UIDAI) இந்த பணிகளை மேற்க் கொள்கிறது. இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கீழ்கண்ட தகவல்கள் அளிக்க வேண்டியிருக்கும்.
1. மார்பளவு புகைப்படம்.
2. கண்களின் ஐரிஸ்.
3. அனைத்து விரல்களின் ரேகைகள்.
4. உங்களது அடிப்படை தகவல்கள்.
கணினி மூலம், அவர்களின் உயிரியளவுகளை பதிவு செய்து கொண்டு, பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள எண் கொண்ட அட்டை ஒன்று வழங்கப்படும்.
0 - நண்பர்களின் கருத்துக்கள்:
Post a Comment